அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட வங்கிக் கணக்குகளுக்கு அனுப்பப்படும் நிதிப் பங்களிப்புகளுக்கு (Financial Contributions) மட்டுமே கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு உள்ளிட்ட அரசாங்க அமைச்சுகள் நேரடியாகப் பொறுப்பேற்கும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
இவ்விடயத்தை கல்வி அமைச்சு ஓர் உத்தியோகபூர்வ அறிக்கையின் மூலம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் மேலும் விளக்கமளிக்கப்பட்டுள்ளதாவது, நிதிப் பொறுப்பேற்கும் ஏனைய சங்கங்களினதோ அல்லது தனிநபர்களினதோ கணக்கு இலக்கங்களுக்கு தமது அமைச்சு அனுமதியையோ (Approval) அல்லது ஆதரவையோ (Endorsement) வழங்கவில்லை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்தோடு, அத்தகைய நிதி உதவிகளுக்கான பொறுப்பை (Liability) சம்பந்தப்பட்ட சங்கங்கள் அல்லது தனிநபர்களே ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கஷ்டமான சூழ்நிலையில் (Difficult Time) மக்கள் வழங்கும் பங்களிப்பைப் பாராட்டுவதாகவும் (Appreciating) மற்றும் மாணவர்களுக்காக வழங்கப்படும் நிதியுதவிகளின் போது அதன் பொறுப்புக்கூறல் மற்றும் வெளிப்படைத்தன்மை (Accountability and Transparency) குறித்து கவனமாக இருக்குமாறும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
நாட்டில் நிலவிய சீரற்ற காலநிலை (Adverse Weather Conditions) காரணமாக பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு உதவும் பொருட்டு தற்போது நாட்டின் பல தனிநபர்களும் மற்றும் அமைப்புகளும் பாராட்டத்தக்க பங்களிப்பை (Commendable Contributions) வழங்கி வருகின்றன.
அவ்வாறு பங்களிப்பை வழங்கும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தாராள நன்கொடையாளர்களின் (Generous Donors) நிதியுதவிகளைப் பொறுப்பேற்பதற்காக அரசாங்கத்தினால் சில பிரத்தியேக வங்கிக் கணக்கு இலக்கங்களும் (Specific Bank Account Numbers) தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
